Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி: பரபரப்பான வீடியோ

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (16:50 IST)
சிரியா எல்லையில் அத்துமீறி மேலே பறந்த ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி நாடு சுட்டு வீழ்த்தியுள்ளது.


 

 
சிரியாவுடனான எல்லையின் அருகே துருக்கி வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்களை கொண்டு அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கியின் பகுதியில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது.

தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்டுள்ளது என ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறுகிறது. மேலும், இந்த விமானம் தீப்பிடித்து எரிந்தபடி மலையில் விழுந்து நொறுங்கும் வீடியோ படங்களையும், வீடியோவையும் ரஷ்ய வெளியிட்டுள்ளது

 
அதிலிருந்த விமானிகள் இருவரும் விமானம் விழுவதற்கு முன்பாக அதிலிருந்து வெளியே பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர். அதில் ஒருவர் சிரியாவில் டர்க்மென் படைகளின் வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments