Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுக்க ஆகஸ்டு மாதம் வரை ஆகும் – அதிர்ச்சியளிக்கும் ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (13:03 IST)
உலகம் முழுவதும் மக்களை பலி கொண்டு வரும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்க ஆகஸ்டு மாதம் வரை ஆகலாம் என ட்ரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக சீனா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் 4,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவுதலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மருந்து இன்று அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ”கொரோனாவை தடுக்க அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவை முற்றிலும் தடுக்க ஆகஸ்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் தடுப்பதற்கே ஆகஸ்டு ஆகலாம் என்ற நிலையில் உலகம் முழுவதும் இதை கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும்? அதற்குள் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படும்? என மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நொய்டா வரதட்சிணை கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆறு மாதத்தில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: கிரண் பேடி

தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 .. தேதியை அறிவித்த பிரேமல்தா

அடுத்த கட்டுரையில்
Show comments