அமெரிக்காவில் நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது, பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துக்களைத் தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து அவருக்கு எதிராக சில பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்நிலையில், இது குறித்து ட்ரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா கூறியதாவது, "ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள் பொய்யாகச் சித்தரிக்கப்பட்டவை." என்றார்.