Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் வெற்றி எதிரொலி: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு மிரட்டல்..!

Mahendran
புதன், 6 நவம்பர் 2024 (13:39 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. ஆரம்பத்திலேயே முன்னிலையில் இருந்த டிரம்ப், தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன. 
 
இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இந்த மிரட்டல் வெறும் புரளி என்று சோதனைக்கு பிறகு தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 177 வாக்கு சாவடிகளில் 32 இடங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ வெளியிட்ட செய்தியில், இந்த மிரட்டல்கள் ரஷ்யாவின் மின்னஞ்சல் தளங்களில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments