Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை: டிரம்பின் அடுத்த அதிரடி

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (05:01 IST)
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனாட் டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் நேற்று அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை என்று அறிவித்துள்ளார். இதற்கு முன்னாள் திருநங்கை ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



 
 
இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுடிவிட்டரில் கூறியிருப்பதாவது, 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாது. இதை எனது  ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே பரிந்துரை செய்கிறேன்.
 
ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகளால் அதிக மருத்துவ செலவு மற்றும் பிளவுகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments