Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற வேட்பாளரின் ஆபாசப் புகைப்படம்; இளமையை அனுபவித்ததாக அறிக்கை

நாடாளுமன்ற வேட்பாளரின் ஆபாசப் புகைப்படம்; இளமையை அனுபவித்ததாக அறிக்கை
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (18:13 IST)
இங்கிலாந்து நாடாளுமன்ற வேட்பாளரின் ஆபாசப் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் தான் இளமையை அனுபவித்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இங்கிலாந்தில் இன்னும் சில வாரங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும், டோரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிற்கும் லியம் மார்ஷெல் ஆஸ்காஃப் என்பவர் இடம்பெற்றுள்ள ஏடாகூடமான போட்டோக்கள் பேஸ்புக்கில் உலவி வருகின்றன.
 

 
இங்கிலாந்தில் தற்போது ஆட்சி செய்து வரும், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சியின் தாய் கட்சி டோரிக் கட்சி. இக்கட்சியின் சார்பில், ஸ்டோக்-ஆன்-செண்ட்ரல் என்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுபவர் லியம் மார்ஷெல். இவரது ஃபேஸ்புக் பக்கத்தில், இவரது புகைப்படங்கள் பல இடம்பெற்றுள்ளன.
 
இப்புகைப்படங்களில் சிலவற்றில் இவர், இரவு பார்டி ஒன்றில் குடித்துவிட்டு நண்பர்களுடன் கும்மாளமடிப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமான மார்ஷெல் போஸ் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், தேர்தல் களத்தில், மார்ஷெல், இங்கிலாந்து பிரதமர் கேமரூனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவுடன், இந்த ஆபசப் புகைப்படம் இணைக்கப்பட்டு பேஸ்புக்கில் உலா வருகிறது. இதனால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
 
webdunia

 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மார்ஷெல் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், அந்த ஆபாசப் புகைப்படங்கள் 7 வருடங்களுக்கு முன், தன்னுடைய இருபது வயதின்போது எடுக்கப்பட்டது என்றும், எல்லோரையும் போல் தானும் இருபதுகளின் இளமையை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே, ஸ்டோக்-ஆன்-செண்ட்ரல் தொகுதியில், தொழிலாளர் கட்சி ஆதிக்கம் அதிகம். இங்கு டோரி கட்சிக்கு வாய்பு கிடைப்பது என்பது மிகவும் குறைவே. இந்நிலையில், லியம் மார்ஷெல் குறித்த ஆபாசப் படமும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும், மக்கள் மத்தியில் டோரி கட்சியின் மதிப்பை கொஞ்சம் குறைத்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil