Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் தொடர்: மேலும் ஒரு வீரருக்கு கொரொனா

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (17:06 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில்  பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2  வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு நடைபெற்று போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இப்படியான நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் விரங்கனைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments