Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் வருடங்களுக்கு பின் வரும் அதிசய தினம் இன்று! – அப்படி என்ன ஸ்பெஷல்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:58 IST)
இன்றைய நாளை உலகம் முழுவதும் பாலிண்ட்ரோம் தினமாக கொண்டாடி வருகின்றனர். இது ஆயிரம் வருடத்திற்கு பின் நிகழும் ஒரு தினமாகும்.

பொதுவாக தேதி, மாதம், வருடம் இவை மூன்றும் குறிப்பிட்ட இலக்கத்தில் இருக்கும்போது நேராகவோ தலைகீழாகவோ படித்தாலும் ஒரே எண்தான் வரும். இதை ஆம்பிக்ராம் என்பார்கள். இந்த ஆம்பிக்ராம் கடந்த 12.02.2021 தேதியில் நிகழ்ந்தது. இதுபோல இரண்டு ஒரே எண்களை கொண்ட தினங்களாக 20.02.2022, 02.02.2022 போன்ற தேதிகளும் வருவதுண்டு.

ஆனால் இரண்டே எண்களை கொண்டு எப்படி படித்தாலும் ஒரே தேதியை குறிப்பிடும் எண்கள் அரிதாகவே நிகழும். இன்று 22.02.2022. இந்த நாளை நடுவே உள்ள புள்ளிகளை நீக்கி, நேராகவோ தலைகீழாகவோ படித்தாலும் அதே தேதி, மாதம், வருடம் வரும். மேலும் இதில் 2,0 ஆகிய இலக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதை பாலிண்ட்ரோம் நாள் என்று அழைக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் 11.01.1011 பாலின்ரோம் தினமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments