Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் தமிழக சாப்ட்வேர் எஞ்சினியர் மனைவியுடன் கைது

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (22:30 IST)
குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்காத தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு  இடது கையில் வீக்கம் இருந்ததால் அந்த குழந்தையை ப்ரோவர்டு கௌண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் உயர்தர சிகிச்சைக்கு பிரகாஷ் தம்பதியிடம் பணம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை தர மறுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்த புகாரை அடுத்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களது இரண்டு குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments