Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கம் ஏற்படும் என கூறிய டிக்டாக் ஜோதிடர் கைது..

Mahendran
சனி, 26 ஏப்ரல் 2025 (13:41 IST)
மியான்மரில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என கணித்ததாக கூறிய டிக்டாக் ஜோசியர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
'ஜான் மோ' எனும் 21 வயதான இளைஞர், தனது டிக்டாக் செயலியில் “மாநகரங்களில் உள்ள அனைவரும் உயரமான கட்டடங்களில் இருந்து வெளியேற வேண்டும், நிலநடுக்கம் வரும்” என எச்சரித்திருந்தார்.
 
இந்த வீடியோ விரைவில் வைரலாகி, 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். பலர் அவரது பேச்சை நம்பி, அவர் சொன்ன தேதியில்  தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளிகளில் கூடாரங்களை அமைத்துத் தங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
 
இதனால் மக்கள் மனதில் பயம் ஏற்பட்டதாக கூறி, மத்திய மியான்மரில் உள்ள ஜான் மோகின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாகவும், அமெரிக்கா மியான்மரைக் தாக்கும், ஆங் சான் சூகி விடுவிக்கப்படும் போன்ற முன்னறிவிப்புகள் அடங்கிய பல வீடியோக்களை டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஜான் மோவின் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளதாக டிக்டாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments