Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா முகமூடி அணிந்த திருடன் அமெரிக்காவில் கைவரிசை

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (15:48 IST)
அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் அதிபர் ஒபாமாவைப் போல் முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
 
மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் பிரபல பாஸ்புட் உணவகம் ஒன்றிற்குள் அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். எனினும் சாப்பிட வந்ததாக கருதிய மக்கள் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை திடீரென அங்கு இருந்த மக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனை கண்டு அதிர்சியடைந்த மக்கள் அப்படியே உறைந்து போய் நின்றனர். பதற்றமான சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்தக் கொள்ளையன், ஒட்டலில் இருந்து கல்லாப்பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் இதேபோல் வேறு ஒருநபரின் முகமுடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments