மருந்து வாங்க வந்த பெண்ணிற்கு “முத்த மருத்துவம்” செய்த கொள்ளையன்..வைரல் வீடியோ

Arun Prasath
சனி, 19 அக்டோபர் 2019 (13:30 IST)
மருந்துக்கடையில் திருடச்சென்ற இடத்தில் பதற்றமடைந்த ஒரு பெண்ணிற்கு கொள்ளையன் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டில் உள்ள மருந்துக்கடை ஒன்றில், திடீரென்று புகுந்த இரண்டு திருடர்கள் கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அந்த கடையின் உள்ளே மருந்து வாங்க வந்த  பெண் ஒருவர், கொள்ளை சம்பவத்தை பார்த்து பதற்றத்தோடு நின்றிருந்தார்.

அப்போது அதனை கவனித்த ஒரு திருடன், அவரிடம் வந்து உங்கள் பணத்தை எடுங்கள் என்று மிரட்டியுள்ளான். அதற்கு அந்த பெண் பணம் என்னிடம் இல்லை என பயத்தில் அலறியுள்ளார். இதனால் அவரை ஆசுவாசப்படுத்துவதற்காக அந்த திருடன் அந்த பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு அவரை சமாதானப்படுத்தினான்.

பின்பு திருட வந்த இருவரும் அந்த மருந்துகடையிலிருந்த 17 ஆயிரம் மற்றும் சில மருந்து பொருட்களையும் அங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

courtesy About Everything

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments