Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்.! முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா.! அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்...

Senthil Velan
வியாழன், 12 செப்டம்பர் 2024 (14:25 IST)
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
 
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, இந்திய பிரதமர் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் செய்தால், அதற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் கூறியிருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். போரை நிறுத்துவது தொடர்பாக  ரஷ்யாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என  தெரிகிறது.  

இந்தியா நம்பிக்கை:

இந்த நிலையில்,  ஜெர்மன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் முன்வருவார்கள் என இந்தியா நம்புகிறது என்று தெரிவித்தார்.
 
இதன் ஒரு பகுதியாகவே, பிரதமர் மோடி முன்மொழிந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்துடன், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், ரஷ்யா சென்றதாகவும் உலகளவில் இந்தியாவின் செயல்பாடுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.


ALSO READ: கல்யாண ராணி சத்யாவுக்கு ஜாமின்.! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்றம் உத்தரவு.!!
 
ரஷ்யா உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments