Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பதவியா எனக்கா? வதந்திகளுக்கு முத்தையா முற்றுப்புள்ளி!

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:19 IST)
நான் அரசியல்வாதி அல்ல, இலங்கை அரசு எனக்கு எந்த பதவியும் வழங்கவில்லை என முத்தைய முரளிதரன் தெரிவித்துள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியில் சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்த முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இந்திய தமிழரான முத்தையா முரளிதரன் அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக பேசி வந்தவர். தற்போது இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே சகோதாரர்கள் வெற்றி பெற்றதற்கு நேரடியாகவே வாழ்த்துக்கள் கூறியிருந்தார் முத்தையா முரளிதரன். 
 
எனவே, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண பகுதிக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பிரபல நாளிதழுக்கு ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார் முத்தையா முரளிதரன். அவர் தெரிவித்ததாவது, 
 
நான் ஆளுநர் ஆவதாக கூறப்படுவது, பேஸ்புக் மூலம் பரவிய ஒரு வதந்தி. எனக்கு அந்த பதவி வ்ழங்கப்படவில்லை. எந்த சந்தர்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர் அரசியல்வாதி அல்ல. 
 
மக்களின் நன்மைக்காக எனது அறக்கட்டளை ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60,000 இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments