Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்சு….காட்டிக் கொடுத்த இந்திய டாக்டர்

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (14:00 IST)
இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் கவுண்ட்ஸ் ஆப் செஸ்டர்  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
 

பிரபலமான இந்த மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாக உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகள் இறப்பில் திடீர் உடல்  நலக்குறைவால் பாதிக்கப்படுவது நடந்து வந்தன. இதுதொடர்பாக  மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது, போலீஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கினர்.

அதில், லூசி லெட்பி என்ற செவிலியர் அங்கு பணியாற்றியதும், அவர் குழந்தைகள் உயிரிழப்பின்போது பணியில் இருந்தது தெரியவந்தது.

அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.  விசாரணையில், பிறந்த குழந்தைகளுக்கு அதிக பாலூட்டியும்,  குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில், ஊசி மூலம் காற்றைச் செலுத்தியும் கொன்றதாக தகவல் வெளியானது.

நர்சு லூசி லெட்பி போலீஸாரிடம் சிக்கியதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர்  ரவி ஜெயராம் உதவி புரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த வழக்கில் லூசி லெட்பி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால்  வரும் திங்கட்கிழமை, தண்டனை  அறிவிக்கப்படும் என்று மான்செஸ்டர் கிரவுன்  நீதிபதி  அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா! - புதுக்கோட்டையில் MP அப்துல்லா துவங்கி வைத்தார்!

தேர்வில் தோல்வி.. தாயையும் தம்பியையும் கொலை செய்த கல்லூரி மாணவர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

12வது குழந்தைக்கு தந்தையானார் எலான் மஸ்க்.. குவியும்வாழ்த்துக்கள்..!

சென்னை அருகே மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் - 4 பேர் கைது

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்..! அதிரடி காட்டிய அண்ணாமலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments