Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Audi கார் நிறுவன தலைவர் 700 அடி பள்ளத்தில் விழுந்து மரணம்! - மலையேற்றத்தில் நடந்த சோகம்!

Prasanth Karthick
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:13 IST)

பிரபலமான ஆடி கார் நிறுவனத்தின் இத்தாலி நாட்டு தலைவராக இருந்து வந்தவர் மலையிலிருந்து விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள விலை உயர்ந்த சொகுசு ரக கார் நிறுவனங்களில் ஒன்று ஆடி நிறுவனம். ஆடி கார் நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாக தலைவர்கள் உள்ளனர். அப்படியாக இத்தாலி யூனிட்டின் தலைவராக இருந்து வந்தவர் ஃபேப்ரிசியோ லாங்கோ(Fabrizio Longo). 62 வயதான லாங்கோ கடந்த 2013ம் ஆண்டு முதலாக ஆடி நிறுவனத்தின் இத்தாலி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

 

லாங்கோவிற்கு ஓய்வு நாட்களில் Hill Climbing எனப்படும் மலையேற்றம் செல்வதில் விருப்பம் உண்டு. சமீபத்தில் வார இறுதியில் இத்தாலி - சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் உள்ள சிமா பேயர் (Cima Payer) என்ற சிகரத்தில் ஏறியுள்ளார். சிகரத்தின் 10 ஆயிரம் அடி உயரத்தை தொட்டிருந்த லாங்கோ சிகரத்தை தொட சில அடிகள் இருந்தபோது தவறி விழுந்தார்.
 

ALSO READ: மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள் - மத்திய பிரதேசத்தில் ஏன் இப்படி செய்கிறார்கள்?
 

700 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக பலியானார் லாங்கோ. அவருடன் மலையேற்றம் சென்ற நண்பர்கள் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள், பள்ளத்தாக்கில் இருந்து லாங்கோவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments