டெக்சாஸ் - இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:32 IST)
டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கே பார்த்தாலும் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்று ஆத்திரத்தில் அமெரிக்க பெண் ஒருவர் இந்திய பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்களை அமெரிக்க பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி உள்ளார். இதனை அடுத்து அவர் போலீசாரால் பிடிபட்டபோது நான் இந்தியர்களை வெறுக்கிறேன், இந்த இந்தியர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ அமெரிக்காவுக்கு வருகிறார்கள். இந்தியர்கள் எங்கே பார்த்தாலும் இருக்கிறார்கள். இவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

எனவே இந்தியாவுக்கு அனைவரும் திரும்பிச் செல்லுங்கள் என்று பேசினார். இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின் படி ஒரு வெறுப்பு குற்றமாகும் என்று சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments