ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

Siva
ஞாயிறு, 2 நவம்பர் 2025 (17:06 IST)
இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில், சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கத்தி குத்துத் தாக்குதலில் 10 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே நடந்தபோது, ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
 
காயமடைந்தவர்களில் ஒன்பது பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
 
இந்த பயங்கர சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் ஆழ்ந்த கவலை மற்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments