ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு -7 அடுத்த விண்வெளி பயணம்!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (20:10 IST)
பிரபல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் குழு 7 ஐ வரும் ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமைத்துள்ளன. இந்த விண்வெளி மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஆய்வுப் பணிக்காக பல நாடுகளைச் சேர்ந்த  நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் சில மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வர்.

இந்த நிலையில், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன அதிபருமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது.

இந்தக்குழு ஆறுமாதம் விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகிறது.

கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் எண்டவர் விண்கலத்தில் குழு  அனுப்பியது.  இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து   குழு 7 ஐ விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அடுத்த கட்டுரையில்
Show comments