Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தமிழர்கள் தான் அதில் டாப்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேட்டி!

இந்தியாவில் தமிழர்கள் தான் அதில் டாப்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேட்டி!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (09:28 IST)
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அதில் பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாராட்டியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். அவருடைய வெளிப்படையான கருத்துக்கள் அந்த நாட்டிலேயே பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர்.
 
இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. அங்கு தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகளால் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
 
குறைந்த அளவு தென் இந்தியர்களை தான் நான் சந்தித்திருந்தாலும் பாகிஸ்தான் குறித்தும் இரு நாட்டு நல்லிணக்கம் குறித்தும் தென் இந்தியர்களின் நேர்மையான அணுகுமுறையை நான் மதிக்கிறேன் என பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

பஹல்காம் தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட் ராணுவ தளபதி ஆசிம் முநீர் தான்.. பாக் முன்னாள் மேஜர் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments