Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டுக் கொன்று விடுங்கள் ; போலீசாரிடம் கெஞ்சும் இலங்கை அகதிகள் : கலங்க வைக்கும் வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (16:07 IST)
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிக்க முயன்ற இலங்கை அகதிகள், இந்தோனேசியா போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள்  ‘எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்று கதறும் வீடியோ வெளியாகி பார்ப்பவரின் மனதை கலங்க செய்துள்ளது.


 

 
மொத்தம் 44 இலங்கை அகதிகள், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். செல்லும் வழியில் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ஆம் தேதி இந்தோனேசிய கடல் பகுதியில் தத்தளித்தனர். 
 
அவர்களை மீட்ட இந்தோனேசிய கடற்படை, கடற்கரையோரத்தில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்களை படகுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவனம் என எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களை தரையில் இறக்க இந்தோனேசிய அரசு மறுத்து வருகிறது. மேலும், ஐ.நாவின் அகதிகள் உடன்படிக்கையில் இந்தோனேசியா இன்னும் கையெழுத்திடவில்லை. அதனால், அகதிகள் அந்நாட்டில் சட்டபூர்வமாக வேலை செய்ய முடியாது. எனவேதான் அவர்களை தரையிறங்க கூட அந்நாட்டு அரசு அனுமதி மறுக்கிறது.
 
படகிலேயே ஆறு நாட்கள் கழித்துவிட்ட அவர்கள், ஒன்று எங்களை கீழே இறங்க அனுமதி கொடுங்கள். இல்லை எங்கள் எல்லோரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறியுள்ளார்கள்.
 
அந்நிலையில் மூன்று பெண்கள் படகிலிருந்து கரையில் குதித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக, வானத்தை நோக்கி போலீசார் சுட்டுள்ளனர். இந்நிலையில்தான் எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று அவர்கள் கதறியுள்ளார்கள்.
 
அந்த அகதிகள் கீழே இறங்கி ஐ.நா அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments