வீடுவீடாக சோதனை செய்யும் தலிபான்கள்: பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (17:25 IST)
வீடுவீடாக சோதனை செய்யும் தலிபான்கள்: பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
ஆப்கானிஸ்தானின் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல கட்டுப்பாடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தாலிபான்கள் சோதனை செய்து வருவதாகவும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே ஏற்பட்ட  போர் நடந்து வந்தது என்பதும் இந்த போரில் தற்போது தாலிபான்கள் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நாட்டை விட்டு வெளியேற பலர் முயற்சித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து வீடு வீடாக தாலிபான்கள் சோதனை செய்து வருவதாகவும் தற்காப்புக்காக மக்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments