Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்மதமின்றி தொட்டாலே பாலியல் குற்றமா? – சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (08:48 IST)
சுவிட்சர்லாந்தில் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அதை பாலியல் குற்றமாக கருத வேண்டும் என்ற புதிய சட்டம் குறித்த விவாதம் கிளம்பியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளும், சட்டத்திட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு நாடும் இந்த விஷயத்தில் ஒவ்விரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை மேம்படுத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ளது. தற்போதுவரை தான் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளானதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தால் அல்லது தொல்லைக்கு உள்ளாகும்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மட்டுமே அது பாலியல் குற்றமாக கருதப்படும் என்ற நிலை உள்ளது.

ஆனால் ஒருவர் விருப்பமின்றி அவரிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ளும்போது அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டாலும், அவருக்கு விருப்பமில்லை என்னும் பட்சத்தில் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும் என விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த சட்டம் பல குளறுபடிகளை ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்