Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க தூதரகம் மீது பயங்கரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல்

அமெரிக்க தூதரகம் மீது பயங்கரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (21:43 IST)
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது பயங்கரவாதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
சவூதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜெட்டாவில் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
 
அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. தூதரகத்திற்கு எதிரேயுள்ள மசூதிக்கு முன்பாகத் தனது வாகனத்தை நிறுத்தி அவர், குண்டை வெடிக்கச் செய்தார்.
 
சம்பவ இடத்திலேயே அந்தப் பயங்கரவாதி உயிரிழந்தார். அருகில் இருந்த காவல்துறையினர் இருவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடம் உடனடியாகக் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய முஸ்லிம்கள் 'மௌனம்' - நடிகர் இர்பான் கானின் கருத்தால் சர்ச்சை