Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னாது...ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா? ஷாக்கிங் வைரல் போட்டோ!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (11:58 IST)
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான் என்றழைக்கப்படும்  ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத்துறைகளில் சிறந்து விளங்கிவரும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர். "ஆப்பிள்" உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். 


 
இவ்வளவு பெரிய பிசினஸ் மேனாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸிடன் மற்ற தொழிலதிபர்களுக்கு தொழில் ரீதியா போட்டிகள் இருந்தாலும் ஒருபோதும் அவரை வெறுத்ததில்லை. அந்த அவளிற்கு உலமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினித் துறையில் புரட்சி செய்து  பலரையும் வியக்க வைத்தார். அவர் கண்ட கனவுகளுக்காக விடா முயற்சியுடன் போராடி பலராலும் யூகித்துக்கூட பார்க்கமுடியாத சாதனையை செய்து காட்டி பிரம்மிக்க வைப்பார். 
 
தொழில்துட்பத்துறையின் கடவுளாக பார்க்கப்படும் இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது 56வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். அவரது இறப்பு ஒட்டுமொத்த உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. 


 
இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்று இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் எகிப்தில் எடுக்கப்பட்டது எனவும் ஸ்டீவ் ஜாப்ஸ் எகிப்தில் தலைமறைவாக இருப்பதாகவும் இணையவாசிகள் புகைப்படத்தை ஷேர் செய்து பரப்பி வருகின்றனர். 
 
இந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருவதோடு,  ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என கூறிவருகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று நோட்டமிட்டு கூறிவருகின்றனர். ஆனால் இது உண்மையா பொய்யா என தெரியவில்லை குழப்பாக இருக்கிறது என பலரும் குழம்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments