Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடக நடிகை சுட்டுக் கொலை - முன்னாள் காதலன் காரணமா?

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2016 (18:28 IST)
பாகிஸ்தானைச் சேர்ந்த நாடக நடிகை சுட்டுக் கொலையில் முன்னாள் காதலன் காரணாமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகின்றனர்.


பாகிஸ்தானைச் சேர்ந்த கிஸ்மத் பெய்க் என்ற நாடக நடிகை நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். பஞ்சாப் மாகாணம் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை மோட்டார் சைக்கிளிலும், காரிலும் தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவருடைய கழுத்து, தொண்டை, கை, கால்கள் என பதினோறு இடங்களில் சுட்டுள்ளனர். அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அதிகப்படியான இரத்தம் வெளியேறியதால் அவர் சிகிச்சை பலனின்றி கிஸ்மத் பெய்க் மரணமடைந்தார்.

இது குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், நடிகை கிஸ்மத் ஏற்கனவே ஒருவரை காதலித்ததாகவும், பின் அவரை உதறி தள்ளிவிட்டு வேறொரு தொழில் அதிபருடன் தொடர்பு வைத்து உள்ளதாகவும், எனவே, அவரை முன்னாள் காதலன் கூலிப்படையை வைத்து கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments