Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜபக்சேவின் சகோதரர் பசில் அரசியலில் இருந்து விலகல்

ராஜபக்சேவின் சகோதரர் பசில் அரசியலில் இருந்து விலகல்
, வியாழன், 5 மார்ச் 2015 (12:21 IST)
இலங்கையின் முள்ளாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியடைந்தார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார்.
 
இந்நிலையில் ராஜபக்சே தோல்வி காரணமாக பீதிக்குள்ளான அவரது சகோதரர்கள் கோத்தபய, பசில் இருவரும் வெளிநாட்டுக்குச் சென்று விட்டனர். இவர்களில் பசில் ராஜபக்சே விரக்தி அடைந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சரணகுண வர்த்தனே எம்.பி.யுடன் தொலைபேசியில் பேசிய பசில் ராஜபக்சே, தான் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும், அரசியலிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 
பசில் ராஜபக்சே, ராஜபக்சே அமைச்ரவையில், பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது குறித்த விசாரணை விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil