Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெடித்துச் சிதறியது விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க ராக்கெட்

வெடித்துச் சிதறியது விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க ராக்கெட்
, புதன், 29 அக்டோபர் 2014 (10:22 IST)
அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சென்ற ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குளானது.


 
ஆளில்லா ராக்கெட் ஒன்றை நாசா வெர்ஜினியா ஏவுதளத்திலிருந்து ஏவியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக அனுப்பப்பட்ட இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது.
 
5,055 பவுண்ட்ஸ் எடை கொண்ட  ராக்கெட் அறிவியல் சோதனைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களோடு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட போது இவ்விபத்து நிகழ்ந்தது.
 
கிழக்கு வெர்ஜினியாவில் நாசா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களிலேயே தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இந்த விபத்தால், ராக்கெட் ஏவுதளத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விசாரணைக்கு நாசா உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil