Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளியை நாசம் செய்த இந்தியா: கடுமையாக சாடும் நாசா

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (13:32 IST)
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியா விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மோடி அறிவித்தார். 

 
விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 
 
மிஷன் சக்தி என பெயரிடப்பட்ட விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்துவிட்டதாக மோடி தெரிவித்தார். இது இந்தியாவிற்கு பெருமை என கூறினார். 
ஆனால், இந்தியாவின் சோதனை மிக மோசமானது இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாதது என நாசா கடுமையான விமர்சங்களை முன்வைத்துள்ளது. இது குறித்து நாசா நிர்வாகி கூறியது பின்வருமாறு, 
 
இந்தியா விண்வெளியில் சோதனை நடத்திய பிறகு சுற்று வட்ட பாதையில் 400 சிதைவு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 60 துண்டுகளை கண்காணித்து வருகிறோம். இந்த சிதைவு துண்டுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான அபாயம் 44% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments