Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை நோக்கி ஏவுகணை சோதனை: வடகொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (14:38 IST)
வடகொரியா தனது கிழக்கு கடலோர பகுதியில் இருந்து கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணையை செலுத்தியதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

 
ஐ.நா.வில் வட கொரியாவின் தூதுவர் தமது நாட்டின் தற்காப்பு மற்றும் ஆயுதங்களை சோதிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று கூறி வேளையில், இந்த சோதனை நடந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வடகொரியா பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்தது.
 
ஆனால் பல நாட்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை பற்றி ஏற்கெனவே அறிந்ததாகவும், அதனால் தென் கொரியாவில் உள்ள தள்ள தமது படையினருக்கோ கூட்டாளி நாட்டுக்கோ எந்த உடனடி அச்சுறுத்தலும் இல்லை என்று கருதியதாகவும் கூறியுள்ளது.
 
எனினும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படைத்தளம், இந்த ஏவுதல் "[வட கொரியாவின்] சட்டவிரோத ஆயுதத் திட்டத்தின் சீர்குலைக்கும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments