Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைக் கொன்று இதயத்தை வெளியே எடுத்த கொடூர மகன்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (16:35 IST)
கலிபோர்னியாவில், ஒருவர் தன் தாயை கொன்றதோடு மட்டுமில்லாமல், அவரின் இதயத்தையும் வெளியே எடுத்த சம்பவம் மனதை உலுக்கியுள்ளது.


 
 
கலிபோர்னியாவில் வசிப்பவர் நெய்லா(64). இவர் கணித ஆசிரியராக பணியாற்றியவர். இவரின் மகன் ஓமர் பெட்டிஜன்(31).
 
மெக்சிகோவில் வசிக்கும் நெய்லாவின் கணவர், தன்னுடைய மனைவியையும், அவரது மகனையும் சில நாட்களாக தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கலிபோர்னியா போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெய்லாவின் வீட்டிற்கு சென்று போலிசார் பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சியில் அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
 
நெய்லா உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில், கொலை செய்யப்பட்டு பிணமாக படுக்கையறையில் கிடந்துள்ளார். மேலும் அவரின் கழுத்திலிருந்து இதயம் வரை கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளாத போலிசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும், அவர் உடம்பில் மொத்தம் 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இது தொடர்பாக அவரது மகன் ஓமர் மீது சந்தேகம் அடைந்த போலிசார், அவரை கைது செய்தனர். விசாரணையில் தன் தாயை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், அவரின் தாய் நிறைய வலி நிவாரன மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
 
அது தொடர்பாக எழுந்த சண்டையில் தன் தாயைக் கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். கொன்ற பிறகு, கழுத்திலிருந்து அவரின் மார்பு வரை கத்தியால் அறுத்து, அவரின் இதயத்தை வெளியே எடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.


 

 
மேலும்,நடந்த சம்பவம் மூலம் எழுந்த அழுத்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, அந்த  இடத்திலேயே சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இப்போது சிறையில் இருக்கும் ஓமரைப் பற்றி, அவரின் அண்டை வீட்டுக்காரர்கள் கூறுகையில்,  ஓமர் மொரோகோ எனும் நகருக்குச் சென்று சில மாதங்கள் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து அவர் கலிபோர்னியாவிற்கு திரும்பிய பிறகு நடத்தையில் அவரிடம் நிறைய மாற்றங்களை பார்த்ததாகவும்ம் தெரிவித்துள்ளனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments