ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

Mahendran
சனி, 3 மே 2025 (14:09 IST)
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப், வரும் மே 5ஆம் தேதி முதல் செயல்பாட்டை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை, நீண்ட வருடங்கள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
 
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயனாளர்களால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்பட்ட ஸ்கைப், தற்போது காலாவதியாகிறது. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்திருந்தது.
 
இதற்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் தற்போது 'டீம்ஸ்' செயலியை பரிந்துரை செய்கிறது. வீடியோ கால்களுக்கு இது ஒரு முன்னேற்றம் வாய்ந்த மாற்றாக இருக்கும் என தெரிவித்துள்ளது. டீம்ஸ் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், ஸ்கைப் உள்நுழைவு விவரங்களை கொண்டு நேரடியாக டீம்ஸில் உள்நுழைய முடியும்.
 
ஸ்கைப் தொடர்புகள் மற்றும் உரையாடல்களையும் டீம்ஸ் செயலிக்கு எளிதில் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. டீம்ஸில் ஸ்கைப்பை விட மேலும் பல புதிய அம்சங்கள் இருப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது.
 
இந்த மாற்றத்தால், மைக்ரோசாஃப்ட் டீம்ஸுடன் கூகுள் மீட், ஸூம் போன்ற பிற வீடியோ சேவைகளும் போட்டியிடும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments