6 மாத குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை செய்து எல்லோரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடாவில் வசிக்கும் தம்பதியின் செல்ல குழந்தைதான் சியாலா. அந்த பெண் குழந்தைக்கு ஆறு வயதுதான் ஆகிறது. சரியாக நடக்க கூட முடியாது. ஆனாலும் அவளுக்கு பயிற்சி கொடுத்து இந்த சாதனையை அரங்கேற்றியுள்ளார்கள் அவளின் பெற்றோர்கள்.
சியாலாவின் பெற்றோர்களும் நீர் சறுக்கு விளையாட்டு வீரர்கள்தான். ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தபடி 209 மீட்டர் வரை சியாலா பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியிருக்கிறாள்.
அவளை இழுத்து சென்ற படகு ஏரியின் மறுமுனையில் நின்றுவிட்டது. இல்லையெனில் இன்னும் அதிக தூரத்தை சியாலா கடந்திருப்பாள் என்று அவளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.
சியாலா ஜாலியாக நீர் சறுக்கு விடும் வீடியோ..