Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 8 மே 2025 (18:40 IST)
பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்றும், லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும் என்றும் அமெரிக்க தூதகம் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூரும் தனது குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டினர் இந்த இரு நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு குறிப்பிட்டு கூறி வருகின்றனர். 
 
குறிப்பாக, சிங்கப்பூர் தனது நாட்டு மக்களுக்கு கூறிய அறிவுறுத்தலில், பாகிஸ்தானில் உள்ள எந்த நகரத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே பாகிஸ்தான் அல்லது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிங்கப்பூர் மக்கள் உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, சிங்கப்பூரை அடுத்து வேறு சில நாடுகளும் இதே போன்ற எச்சரிக்கையை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments