Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2017-ல் முதல் ஆச்சர்ய நிகழ்வு: எரிகற்கள் பொழிவு!!

2017-ல் முதல் ஆச்சர்ய நிகழ்வு: எரிகற்கள் பொழிவு!!
, புதன், 4 ஜனவரி 2017 (12:30 IST)
வானில் தெரியும் நட்சத்திரங்கள், கோள்கள், திடீரென்று தோன்றும் எரிகற்கள் உள்ளிட்டவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 


 
 
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு எரிகற்கள் பொழிவு வானில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த நிகழ்வு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்று கூறியுள்ளது. ஆசியாவில் வசிப்பவர்களுக்கு இரவு 7.30 மணியளவில் தென்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 
 
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் இந்த நிகழ்வு ஏற்படும். வானில் சுற்றி வரும் 2003 EH1 என்ற எரிகல் புவியை கடந்து செல்லும் போது, அதன் பகுதிகள் சிதறி வளிமண்டலத்திற்குள் வரும் போது எரிந்து மறைந்துவிடுகின்றன. 
 
இதனை Quadrantid Meteor என்று அழைக்கின்றனர். வானில் கிட்டதட்ட 2 முதல் 3 மணி நேரம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா எங்கு போட்டியிட்டாலும் அங்கு போட்டியிடும் தீபா?