தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு !

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (22:19 IST)
தாய்லாந்து நாட்டில் நாங் புவா லாம்பு என்ற மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதிலொ, 22 குழந்தைகள் உள்பட மொத்தம் 34 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் நாங் புவா லாம்பு என்ற மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தைகள் மையத்தில் இன்று மதியம் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்ம நபர், அவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார்.

இதில், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்பட அங்குள்ள ஊழியர்கள், ஆசிரியர என மொத்தம் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து, பிரதமர் உத்தரவின்பேரின். போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு முன்னாள்  போலீஸ் அதிகாரி எனவும், அவர் தன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கண்டனம்

ஜிஎஸ்டி சீர்திருத்த நாளில் சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

கிராம உதவியாளர் பணிக்கு வயது வரம்பு 42 ஆக உயர்வு? - தமிழக அரசு உத்தரவு!

சபரிமலையை மேம்படுத்த ரூ.1,000 கோடி: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கற்பை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை வைக்க சொல்லி கொடுமை: கணவர் உள்பட 4 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments