Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (10:52 IST)
அல்ஜீரியாவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு ஒன்று, கால்சிய கல்லாக மாறியிருந்தது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
75 வயது மூதாட்டி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்தபோதுதான், இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. அவரது வயிற்றில், சுமார் 7 மாதம் வரை உயிருடன் இருந்து இறந்த சிசு ஒன்று, கல் போல் மாறியிருப்பதை கண்டறிந்தனர்.
 
கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்து, ரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு இறந்துவிடுகிறது. உடல் தனது இயற்கையான பாதுகாப்பு சக்திகளை பயன்படுத்தி, இறந்த சிசுவை கால்சியமாக மாற்றி, கல் போல ஆக்கிவிடுகிறது. இதனால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. இது உடலின் அற்புதமான தற்காப்பு முறையை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகும்.
 
இப்படிப்பட்ட நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் ஒரு மூதாட்டியின் வயிற்றில் 40 ஆண்டுகளாக இருந்த 'கல்லாய் மாறிய குழந்தை' கண்டுபிடிக்கப்பட்டது.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments