Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: பர்வேஸ் முஷரப்

Webdunia
புதன், 4 நவம்பர் 2015 (13:37 IST)
சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியளித்த முஷரப் கூறியதாவது:-
 
காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான இந்திய அரசுகளுடன் நான் பழகியுள்ளேன். என்னைப் பொருத்தமட்டில் தற்போதைய கேள்வி, கட்சிகளைப் பற்றியது அல்ல மாறாக தனிநபர் தொடர்பானது.
 
இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது. வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான்.
 
எனவேதான், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முன்னர் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்றது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.
 
இந்தியாவில் இயங்கிவரும் சிவசேனா கட்சியை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும். சிவசேனாவின் நடவடிக்கைகளை ஐ.நா.சபை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறு முஷரப் கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments