மோதிப் பார்க்கலாமா? காரை முந்தும் போது வீராங்கனை பலி

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (21:57 IST)
அமெரிக்க நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது இண்டிகா மாநிலம். இதன் தலைநகர் இண்டியானாபொலிஸ்.

இங்கு வசித்து வந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ஸன்(24). இவர் பிரபல கார் பந்தய வீராங்கனையாக செயல்பட்டு வந்தார்.

இவர் தன் 10 வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டு டி.கியூ.மிட்ஜெட் வகைக் கார்களையை ஓட்டுவதில் திறமைசாலியாக இருந்துவந்தார்.

இவர், ஜிஎம்சி டைரைன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சாலையில் அவரது நண்பர் ஒருவர் வேறு  காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்லும்போது, ஜிஎம்சி சென்ற பாதையில் வேறு ஒருவர் குறுக்கே வந்தார். இதில், ஜிஎம்சி கார் கட்டுப்பாட்டை இழந்து இரு கார்களும் மோதிக் கொண்டது.

இதில், ஆஷ்லியா படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments