நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு - டிரம்ப் பற்றிய அதிர்ச்சி செய்தி

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (14:17 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நண்பர்களின் மனைவிகளுடன் கள்ள உறவில் இருப்பவர் என அமெரிக்கர் ஒருவர் எழுதிய புத்தககத்தில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உலகின் அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருப்பவர் டொனால்ட் டிரம்ப். இவர் எப்போது சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என பல நாட்டு மக்களும் எதிர்பார்த்த போது, டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். 
 
இந்நிலையில்,  அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் மைக்கெல் உல்ப் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திற்கு ‘பயர் அண்ட் புரி : இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்’ என அவர் பெயர் வைத்துள்ளார்.
 
இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன் 18 மாதங்கள் அவர் 200க்கும் மேற்பட்ட நபர்களை சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். பல நாடுகளுக்கும் சென்று பலரை சந்தித்து பேசியுள்ளார்.
 
அதில், டிரம்ப் அதிபராக ரஷ்யா பெருமளவில் உதவி செய்தது எனத் தொடங்கி டிரம்பை பற்றிய பல  ரகசியங்களை அவர் அந்த புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
 
டிரம்ப் அதிபரானது அவரது மனைவிக்கே பிடிக்கவில்லை.  அவரது குடும்பத்தினருக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. டிரம்ப் தனது நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அதிகம் விரும்புவார். தன்னுடைய நண்பர்களை பல வழிகளில் ஏமாற்றுவார். 
 
டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பிற்கு ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அவர் எப்படியாவது, டிரம்பை அதிபர் பதவியிலிருந்து இறக்கிவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கான திட்டங்கள் தயாராகி வருகிறது” என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புத்தகம் டிரம்ப் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்