Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலைச்சரிவில் கவிழ்ந்த மழலையர் பள்ளி பேருந்து - 11 பேர் பலி

மலைச்சரிவில் கவிழ்ந்த மழலையர் பள்ளி பேருந்து - 11 பேர் பலி
, வெள்ளி, 11 ஜூலை 2014 (12:47 IST)
சீனாவில் மழலையர் பள்ளி பேருந்து மலைச்சரிவில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அப்பேருந்தில் பயணித்த 8 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாயினர்.
 
சீனாவின் தென்-மத்திய ஹுனான் மாகாணத்தில் உள்ள ஸியாங்டன் பகுதியில் மழலையர் பள்ளி பேருந்து ஒன்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும் வழியில், குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
 
மக்கள் தொகை குறைவான அப்பகுதியில் விபத்து நடந்ததாக தெரிகிறது. இதனால்,  மீட்பு பணியில் தாமதம் ஏற்பட விபத்தில் சிக்கிய 8 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். 
 
இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil