Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ ஏன் அதை கடிக்கவில்லை? பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் பள்ளி நிர்வாகி

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (14:43 IST)
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியிடம் பள்ளி நிர்வாகி விசாரணையின்போது, உன்னை பாலியல் வன்கொடுமை செய்யும்போது நீ ஏன் அவனது உறுப்பை கடிக்கவில்லை? நீ என்ன வகை ஆடை அணிந்திருந்தாய்? போன்ற கேள்விகளை கேட்டு மேலும் மாணவியை மனமுடைய செய்துள்ளார்.


 

 
அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் 16 வயது மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்காக காந்திருந்துள்ளார். அப்போது அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர், பேருந்து வரும் வரை செய்தி அறையில் காத்திருக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
 
அங்கு வைத்து சக மாணவர், மாணவியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி மறுநாள் பெற்றோருடன் சென்று பள்ளி நிர்வாகியிடம் புகார் செய்துள்ளார்.
 
பள்ளி நிர்வாகி அந்த மாணவியிடம், அவன் உன்னை வன்கொடுமை செய்யும்போது நீ அவனது உறுப்பை கடிக்கவில்லையா? கால்களை நெருக்கி வைத்து வன்கொடுமையை தடுத்திருக்கலாமே? நீ அப்போது என்ன வகை ஆடை அணிந்திருந்தாய்? போன்ற கேள்விகளை கேட்டு அந்த மாணவியை மேலும் மனமுடைய செய்துள்ளார்.
 
பின்னர் இத்தகைய தேவையில்லாத கேள்விகளை கேட்டதற்கு பள்ளி நிர்வாகி மிது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? விஜய்யின் தவெக விளக்கம்..

ரயில் போகும்போதே இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! இமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி!

2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த மநீம பெண் பிரபலம்! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்