Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமல் ராஜபக்சேவிற்கு பொன்சேகாவின் மகள் சாட்டை அடி!

நமல் ராஜபக்சேவிற்கு பொன்சேகாவின் மகள் சாட்டை அடி!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (19:29 IST)
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 

 
நிதி மோசடிகள் தொடர்பான சிறப்பு காவல்துறை பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் யோஷித்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்திவந்தனர். ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில்  சிஎஸ்என் ஊடக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் நிதி மோசடி  நடந்ததாகக் கூறப்படுவிறது.

யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமையை அரசியல் பழிவாங்கல் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது குறித்து தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா, “கொல்லப்பட்டவர்களின் பல குடும்பங்கள், தந்தைமார், பெற்றோர், குழந்தைகள் அழுதது நினைவில் இல்லையா?
 
எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூதீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர்? பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும்? என்பதை நாமல் உணரட்டும்.
 
இந்தக் கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அப்சரா, ’ராஜபக்சே அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்தினை மதிக்கும். கட்டுப்படும் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அவலத்தை, அவமானத்தை, அநீதியை ஒருபோதும் மறக்க முடியாது.
 
நாட்டில் தற்போது சரியான காரணங்களிற்காக செயற்படும் நடைமுறை காணப்படுவதற்கும், சட்டம் எந்தவித தலையீடுகளும் இன்றி செயற்படுகின்றமைக்கும், நள்ளிரவில் மக்கள் வெள்ளை வானில் கொண்டு செல்லப்படும் நிலை இல்லாதமைக்கும் நமல் ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

Show comments