செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (14:32 IST)
செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாக இத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா? மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா? எனக் கண்டறிய நாசாவால் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மேலும் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம் அண்மையில் செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து  கட்டுப்பாட்டை இழந்தது.
 
நிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தில் இருப்பதால் அந்தத் தண்ணீர் உப்பு நீராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
இத்தாலி ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு புதிய ரோவர் ஒன்றை அனுப்பி குறிப்பிட்ட உப்பு நீர் ஏரியை ஆய்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நீரில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்றும், ஆய்வு செய்ய நாசா திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments