Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி மோகம்: கேமாராவிற்கு பதிலாக துப்பாக்கியை அழுத்திய இளம்பெண்

Webdunia
சனி, 23 மே 2015 (21:47 IST)
செல்ஃபி எடுக்கும்போது கேமாராவிற்கு பதிலாக துப்பாக்கியை விசையை அழுத்திய இளம்பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் மெக்சிகோவில் ரஷ்ய இளம்பெண் (21) ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாவலரின் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
 
அதனை தனது தலையில் குறி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கேமராவை அழுத்துவதற்கு பதிலாக, அவர் துப்பாக்கியின் விசையை அழுத்தியுள்ளார். இதனால் துப்பாக்கி குண்டு வெடித்து அவரது தலையில் பாய்ந்தது.
 
இதில் அந்த இளம்பெண் படுகாயமடைந்துள்ளார். உடனே ஆபத்தான நிலையில் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் உடன் பணிபுரிபவர்கள் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காவல் துறையினர் அவரது கைக்கு துப்பாக்கி எவ்வாறு போனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

Show comments