ரஷ்யாவில் தண்ணீரில் மூழ்கிய பெண் ஒருவரை காப்பாற்றிய இளைஞர் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்ததை பார்த்த அந்த பெண்ணின் கணவர் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவின் சைபீரியாவின் பைக்கால் ஏரியில் கணவன், மனைவி இருவர் மது அருந்தி விட்டு தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது மனைவி ஆழமான பகுதிக்கு சென்று காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் அந்த கணவன் மனைவி இருவரையும் காப்பாற்றினார்கள்.
தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு அங்கிருந்த இளைஞர் ஒருவர் வாய் வைத்து செயற்கை மூச்சு கொடுத்தார். இதனை பார்த்த மது அருந்திவிட்டு போதையில் இருந்த அவரது கணவர் அந்த இளைஞர்களை தள்ளிவிட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
அவரிடம் இருந்த கத்தியை வாங்க முயற்சித்த போது அந்த நபர் இரண்டு நபர்களை கத்தியால் குத்தினார். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவருக்கு இரத்தப்போக்கு அதிகமா இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளைஞரை கத்தியால் குத்திய நபர் மீது காவல்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.