Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படையினர் குண்டுவீசித் தாக்குதல்...8 பேர் பலி

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (22:16 IST)
கிழக்கு உக்ரைனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஷிய ராணுவத்தின் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து  1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன.

எனவே  உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என்றறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஷிய ராணுவத்தின் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில், அந்தக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும், இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் பலியாகினர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது, உக்ரைனில் டொனெட்ஸ்த் என்ற மாகாணத்தின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி ரஷிய படை தீவிரம் காட்டி வருகிறது.

அப்பகுதியில் 80% பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments