Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவிலுள்ள மிகப்பெரிய நூலகம் ஒன்றில் தீ விபத்து: மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் தீயில் கருகின

ரஷ்யாவிலுள்ள மிகப்பெரிய நூலகம் ஒன்றில் தீ விபத்து: மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் தீயில் கருகின
, ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (12:40 IST)
ரஷ்யாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அமைந்துள்ள மிகப் பெரிய நூலகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
ரஷ்ய நாட்டில், சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனம் (ஐஎன்ஐஓஎன்) உன்னது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 
சுமார் 21500 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில், இந்த நூலகத்தின் இரண்டாவது மாடியில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ சில நிமிடங்களில் மள மளவென பரவியது. இந்தத் தீயால் அந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பல அரிய ஆவணங்கள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் 1 மில்லியன் ஆவணங்களுக்குமேல் சேதமடைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil