கொரோனாவிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக ரஷ்யா! – அதிகரிக்கும் பாதிப்புகள்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (08:34 IST)
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவில் மற்ற நாடுகளை விடவும் சமீபத்திய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் ஆரம்பத்தில் வெகுவாக சீனா பாதிக்கப்பட்டாலும், பிறகு மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கியது. ஆனால் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிலைமை கட்டுக்கடங்காதவாறு அதிகரித்தன. அதை தொடர்ந்து அமெரிக்காவில் பாதிப்பு அதிகமானதால் அது முன்னிலையை அடைந்தது. தற்போது அதிகமான பாதிப்பினால் அமெரிக்காவின் எண்ணிக்கையை நெருங்கி வருகிறது ரஷ்யா.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவின் மொத்த பாதிப்பு 2, 21, 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,009 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 39, 801 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் இந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை இத்தாலி மற்றும் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு ரஷ்யாவை கொண்டு சென்றுள்ளது. அமெரிக்கா கொரோனா பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ள நிலையில்  ரஷ்யா மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments