Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீவைண்ட் 2017: அமெரிக்க அதிபரானதும் 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை....

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (13:28 IST)
2017 ஆம் ஆண்டின் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவது உலக அளவில் அரங்கேறிய முக்கிய சம்பவங்களை காண்போம்.....
 
அதிபரான டிரம்ப்; முஸ்லிம் நாடுகளுக்கு தடை...
 
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் மத்தியில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பதவியேற்றார். இதன் பின்னர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தினார். 
 
ஏழு இஸ்லாம் நாடுகளை (இரான், ஈராக், ஏமன், சோமாலியா, லிபியா சூடான், மற்றும் சிரியா) சேர்ந்த மக்களை அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார் டிரம்ப். வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன. தொழில் ரீதியாக அமெரிக்காவிற்கு நுழைய முடியாமல் இஸ்லாம் நாட்டு தொழிலதிபர்கள் தவித்தனர். 
 
இதனை எதிர்த்து வாஷிங்டனிலும், நியூயார்க்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிரம்பின் தன்னிச்சையான இந்த முடிவால், உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கும் நிலை உருவாகியது. டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்ததைத் தொடர்ந்து, டிரம்பின் குடியேற்ற கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments